Wednesday, October 10, 2007

Blood Diamond

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு. நமது இலங்கை தமிழ் சகோதரர்கள் மட்டும்தான் சொந்த நாட்டிலேயே அடிமைகளாகவும், அகதிகளாகவும் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் தெனஅமெரிக்க வாழ் பழங்குடியினரும் அனுபவிக்கும் கொடுமையையும், அவலங்களையும் அலசும் ஒரு படம். Conflict Diamonds எனப்படும் ரத்த வைரங்கள் எப்படி தென் அமெரிக்காவை விட்டு உலக நாடுகளைச் சென்று அடைந்து அமெரிக்க மகளிர் விரல்களில் தவழ்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். டிகாப்ரியோ படத்திற்க்கு படம் மெருகேறிக்கொண்டிருக்கிறார் என்பதற்க்கு இந்த படம் சாட்சி. கடந்த நான்கு வருடங்களாக அவரது படம் சிறந்த படங்களின் வரிசையில் இடம் பெற்று விடுகின்றது. (உ‍-ம் The Aviator, The Departed போன்றவை. ‍உலக மக்கள் பார்க்க வேண்டிய படம்.